21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு ஏற்றதல்ல – உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு

பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது,

“புதிதாக அறிமுகம் செய்யப்படும் பட்டப் படிப்புகள் அந்தந்த மூலப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் 70 சதவீத பாடங்களை கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை மூலப் படிப்புக்கு இணையானதாக கருதி அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில் தான் தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்றனர்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உயர் கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்கின்றன. இந்த படிப்புகளில் பட்டம் பெறுபவர்களும் அரசுப் பணியில் சேர விண்ணப்பிக் கின்றனர்.

இவர்களது சான்றிதழ்களை சரிபார்ப்பதில் சிக்கல்ஏற்படுகிறது. இதனால் எந்தெந்தபட்டப் படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை உயர் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி பல்வேறு பல்கலை. சார்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப்பணிக்கான கல்வித்தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலர் தா.கார்த்திகேயன்வெளியிட்ட அரசாணை:

 • கோவைதொழில்நுட்பக் கல்லூரி வழங்கும்எம்.எஸ்சி பயன்முறை(அப்ளைடு) வேதியியல், பாரதியார் பல்கலை.
 • திருப்பதிஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. யின் எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல்
 • திருச்சி நேஷனல் கல்லூரி எம்.எஸ்சி பகுப்பாய்வு வேதியியல்
 • பனாரஸ் ஐஐடி மற்றும் வாரணாசி இந்து பல்கலை. வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதியியல்
 • பாரதிதாசன் பல்கலை. யின் எம்.எஸ்சி வாழ்க்கை அறிவியல் ஆகியவை எம்.எஸ்சி வேதியியலுக்கு இணையானவை அல்ல.

இவர்கள் எம்.எஸ்சி வேதியியல் கல்வித்தகுதிக்கான அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாது,

 • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் எம்ஏமொழியியல், எம்ஏ ஆங்கிலப்படிப்புக்கு இணையானதாக ஏற்கப்படாது, மேலும்,
 • கோவா பல்கலை., வெங்கடேஸ்வரா பல்கலை.யின் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பி.எஸ்சி அறிவியல் ஆகியவை
 • பெங்களூர் பல் அரசுப் பணிக்கான பி.எஸ்சி இயற் கலை. வழங்கும் பிஏ ஆங்கிலம் பியல் கல்வித் தகுதிக்கு இணை அரசுப்பணிக்கானகல்வித்தகுதிக்கு யாக ஏற்கப்படாது.
 • சென்னை பல்கலை. வழங்கும் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்,
 • அழகப்பா பல்கலை.யின் எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகியவை அதன் மூலப் படிப்புகளான பி.காம். எம்.காம் ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல.
 • திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ் தகவலமைப்பு மற்றும் பயன்பாடு (பகுதிநேர ) படிப்பானது எம்.எஸ்சி கணினி அறிவியலுக்கும்
 • விஐடி பல்கலை.யின் எம்.எஸ்சி மின்னணுவியல் படிப்பு எம்.எஸ்சி இயற்பியலுக்கும் இணையானதல்ல.
 • அழகப்பா பல்கலையின் பி.எஸ்சி மின்னணுவியல் படிப்பு.
 • இ.எம்.ஜி.யாதவ் மகளிர் கல்லூரியின் பி.எஸ்சி இயற்பியல் & தகவல் தொழில்நுட்பம்
 • திருப்பதி ஸ்ரீ புதுச்சேரி பல்கலை உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் புதிதாக அறிமுகம் செய்துள்ள 20 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு ஏற்றவை எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளன.